எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசன் எப்போது முதல் ஆரம்பம்... வெளிவந்த தகவல்

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசன் எப்போது முதல் ஆரம்பம்... வெளிவந்த தகவல்

பிக்பாஸ்

தமிழ் சின்னத்திரையில் ஆடம், பாடல், விளையாட்டு, காமெடி, இசை என பல கான்செப்ட் வைத்து ரியாலிட்டி ஷோக்கள் நிறைய வந்துவிட்டன.

அப்படி மக்களுக்கு பிடித்தது போல் ஷோக்கள் ஒளிபரப்பி விஜய் டிவி மாஸ் காட்டி வருகிறார்கள். அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரம்மாண்டத்தின் உச்சமான ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான்.

பாலிவுட் சினிமாவில் படு வெற்றியடைந்த இந்த ஷோ முதன்முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழில் ஆரம்பமானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

 

அடுத்த சீசன்

கடைசியாக ஒளிபரப்பான 9வது சீசனில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துவிட்டது. அந்த சீசன் டைட்டிலை வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திவ்யா கணேஷ் வென்றார்.

ஆனால் மக்கள் வெற்றியாளராக கானா வினோத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அவர் இடையில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து திவ்யா கணேஷ் வெற்றிப் பெற்றார்.

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசன் எப்போது முதல் ஆரம்பம்... வெளிவந்த தகவல் | Bigg Boss 10 Season Launch Date

தற்போது 10வது சீசனிற்கான பேட்டி தொடங்கிவிட்டது. அதாவது வரும் செப்டம்பர் 6 முதல் பிக்பாஸ் 10வது சீசன் ஆரம்பமாக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

LATEST News

Trending News