Aishwarya Lekshmi: அழகும்.. அறிவும் இருக்குற அற்புதமான நடிகை.. நிஜமாவே சம்பவக்காரி ஐஸ்வர்யா லட்சுமி!

Aishwarya Lekshmi: அழகும்.. அறிவும் இருக்குற அற்புதமான நடிகை.. நிஜமாவே சம்பவக்காரி ஐஸ்வர்யா லட்சுமி!

சென்னை: கட்டா குஸ்தி படத்தில் கோயில் திருவிழா காட்சி வரை பவ்யமான பெண்ணாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி தனது கணவருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் எதிரியை ஏரில் பறக்க வைக்கும் காட்சியும் அவரது முடியை பிடித்து இழுத்த உடனே அடியாளின் கையோடு அது கழண்டு வந்து விஷ்ணு விஷாலின் முகத்தில் அறையும் காட்சியை செல்லா அய்யாவு சொன்னதுமே ஓகே நடிக்கிறேன் என சொல்லியிருப்பார் என்றே தோன்றுகிறது.

கமர்ஷியல் படங்களில் லூசு ஹீரோயினாகவும் பொம்மை ஹீரோயினாகவும் வெறும் கிளாமர் கதாபாத்திரமாகவோ நடிக்காமல் கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு வலிமையான கதாபாத்திரமாக இருந்தால் இயக்குநர்களே உடனடியாக ஐஸ்வர்யா லட்சுமிக்கு கால் அடித்து விடுகின்றனர்.

அவரும் அதே போன்ற கதைகளையே தொடர்ந்து தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார். தமிழில் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெறவும் அவரது கதை மற்றும் கதாபாத்திர தேர்வும் தான் காரணம்.

சம்பவக்காரி ஐஸ்வர்யா லட்சுமி: கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு 34 வயதாகிறது. மலையாள திரையுலகில் நிவின் பாலிக்கு ஜோடியாக 2017ல் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் 2019ல் அறிமுகமானார். ஜககே தந்திரம், கார்கி, கேப்டன் படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அசத்தினார். அந்த படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த கட்டா குஸ்தி படம் மிகப்பெரிய வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. மாமன், தக் லைஃப், கட்டா குஸ்தி 2 என தொடர்ந்து தமிழில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகிலும் அவருக்கு பல படங்கள் உள்ளன.

அழகும் அறிவும்: நடிகை சாய் பல்லவி போல அறிவும் அழகும் கொண்ட நடிகையாகவே அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. கவர்ச்சி நடிகையாக நடிக்காமல், நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் காட்டி நடித்து ஸ்கோர் செய்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

Aishwarya Lekshmi s stories and characterisation selection gives her continous blockbuster

ஸ்போர்ட்ஸ் வீராங்கனை போலவே: கட்டா குஸ்தி முதல் பாகத்தை விட 2வது பாகத்துக்காக அப்படியே ஸ்போர்ட்ஸ் வீராங்கனையாக மாறி நடித்து சம்பவம் செய்திருந்தார். விஷ்ணு விஷால் உடன் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மற்றும் மல்யுத்த வீராங்கனையுடனான சண்டைக்காட்சி என எல்லாமே பக்கா தான். மேலும், சம்பவக்காரி பாடலில் கிளாமராகவும் நடனமாடி கலக்க இப்படியொரு காம்பினேஷனில் கலக்கும் இவருக்கு எப்படியான கதாபாத்திரம் கொடுத்தாலும் தூக்கி சாப்பிடுவார் என்கின்றனர். சூரியின் மாமன் படம் ஓடியதற்கும் கட்டா குஸ்தி 2 ஓடிக்கொண்டிருப்பதற்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்கு அளப்பரியது.

உமன் சென்ட்ரிக் படம் ரெடி: கட்டா குஸ்தி2 -ன் வெற்றிக்குப் பிறகு, ஐஸ்வர்யா லட்சுமியின் அடுத்த திட்டம் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு படமாக அமையவுள்ளது. ஏற்கனவே கார்கி படத்தை தயாரித்து சாய் பல்லவி உடன் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டியில், இப்போ கார்கி உருவாகியிருந்தால் நானே சாய் பல்லவி பண்ண கேரக்டரை பண்ணியிருப்பேன் என்றார். இந்நிலையில், அடுத்ததாக உமன் சென்ட்ரிக் படம் ஒன்றை கொடுக்க ரெடியாகி உள்ளார். விரைவில், அந்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாக காத்திருக்கின்றன.

LATEST News

Trending News