விவாகரத்து அறிவித்த ஏஆர் ரகுமான் - சாய்ரா!! மகன் அமீன் போட்ட பதிவு..

விவாகரத்து அறிவித்த ஏஆர் ரகுமான் - சாய்ரா!! மகன் அமீன் போட்ட பதிவு..

ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர்.

1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானுடன் வந்த பிரச்சனை காரணமாக சாயிரா தனியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார்.

மனக்கசப்பு அதிகம் ஆனது, இடைவெளி தொடர்ந்து பெரிதாகி கொண்டே போனது என்றும், அதை சரி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் எடுத்து இருக்கின்றனர். 

இந்நிலையில் பெற்றோர்களின் விவாகரத்து குறித்து அவர்களது மகன் அமீன் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார். அதில், இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும், உங்களின் புரிதலுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார் அமீன். அவரது பதிவிற்கு பலரும் ஆதரவளித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News