'வந்துவிட்டார் முத்துவேல் பாண்டியன்.. 'ஜெயிலர்' படத்தின் வீடியோ

'வந்துவிட்டார் முத்துவேல் பாண்டியன்.. 'ஜெயிலர்' படத்தின் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படைப்பின் கிளிப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை அறிவித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலான காட்சிகள் இருப்பதை அடுத்த ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES