பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து யுகேந்திரன் வெளியிட்ட வீடியோ- என்ன சொன்னார் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி, 100 நாட்கள் ஆண், பெண் இருவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்ற கான்செப்ட் சொன்னதும் தமிழக மக்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இது என்ன நிகழ்ச்சி அப்படி எப்படி இருக்க முடியும், இதெல்லாம் சரியான நிகழ்ச்சி இல்லை என்றனர். ஆனால் இப்போது மக்கள் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம்.
ஒரு சீசன் முடிந்ததுமே அடுத்த சீசன் எப்போது என முதலில் கேட்பவர்களே அவர்கள் தான்.
தற்போது 7வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு மாதத்தை எட்டிவிட்டது.
கடந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து யுகேந்திரன் வெளியேறியிருந்தார். அதன்பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்த யுகேந்திரன் இப்போது நிகழ்ச்சி பற்றியும், தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் குறித்தும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்காக நன்றி தெரிவித்து பாடல் பாடி உள்ளார்.