பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை!! விவாகரத்து செய்த தனுஷை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்...
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தன் திறமையால் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ், பல படங்களில் நடித்தும் இரு படங்களை இயக்கியும் வருகிறார். இதற்கிடையில் 18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இருவரும் சமரசமாக பிரிவதாக கூறியது இரு குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது சட்டரீதியாக விவாகரத்து செய்ய மனு அளித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பலர் விவாதித்து பேசி வருகிறார்.
அந்தவகையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், மேடையொன்றில் தனுஷை பற்றி மோசமான பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், நடிகர் தனுஷ் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக கேட்கிறேன், பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வேண்டி இருக்கு உனக்கு என்று மோசமாக பேசியிருக்கிறார்.
தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா எல்லாம் ஒரு பொம்பளையா என்று பலர் பேசுமாறு வாழாமல் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை கருத்தில் வைத்து இருவரும் இணைந்து வாழுங்கள் என்று அறிவுரை கூறியும் பேசியிருக்கிறார் கே ராஜன்.