பாண்டியன் ஸ்டோர்ஸ் பெண்கள் குழந்தை வைக்கும் பேகில் என்ன வைத்துள்ளார்கள் பாருங்க- என்னமா யோசிக்கிறாங்க...
அண்ணன்டா-தம்பிடா என வேதாளம் படம் டயலாக் போல் விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பல எபிசோடுகளுக்கு பிறகு இப்போது தான் தனத்தின் நோய் குறித்த விஷயத்தை வீட்டில் கூறியுள்ளார்கள். அதை வைத்து இன்னும் எத்தனை நாள் கதையை ஓட்டுவார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் வேறு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முதல் சீசன் முடிந்து 2வது சீசன் 5 வருட கடந்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் என்கின்றனர், ஆனால் மற்றபடி 2வது சீசன் குறித்து விவரங்கள் சரியாக வெளியாகவில்லை.
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள தனம், முல்லை, ஐஸ்வர்யா என 3 பேருக்கும் குழந்தை பிறந்துவிட்டது, ஆனால் இதுவரை அவர்கள் குழந்தை முகத்தை காட்டியதே இல்லை.
இந்த நிலையில் அவர்கள் குழந்தை வைத்திருக்கும் பேகில் என்ன வைத்துள்ளார்கள் என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. முல்லை வைத்திருக்கும் குழந்தை Bagல் அவர் பயன்படுத்தும் குட்டி பேனை வைத்துள்ளார்
என்ன தான் குழந்தையை காட்டாமல் இருந்தாலும் இப்படியெல்லாம் செய்யலாமா என ரசிகர்கள் நிறைய விமர்சனங்களை வைக்கின்றனர்.
இப்போது இந்த Bag பற்றிய விஷயம் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.