ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கவில்லை..ஆதாரத்துடன் தகவல்கள் இதோ.

ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கவில்லை..ஆதாரத்துடன் தகவல்கள் இதோ.

லியோ படம் வெளிவருவதற்கு முன் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், லியோ கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் முறியடித்துவிடும் என்பது தான். சமூக வலைத்தளங்களிலையும் இந்த சண்டை தான் நிலவி வந்தது. அதற்கான தீர்வு தற்போது கிடைத்துவிட்டது.

ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் மொத்த வசூல் விவரம் குறித்து தகவலை பார்க்கலாம். ஜெயிலர் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

ஆனால், லியோ இதுவரை ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 597 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 600 கோடியை மட்டுமே தொட வாய்ப்பு உள்ளது.

ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கவில்லை..ஆதாரத்துடன் தகவல்கள் இதோ | Leo Failed To Beat Jailer Total Collection

இதை வைத்து பார்க்கும்போது ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் லியோ முறியடிக்கவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் லியோ படம் ரூ. 218 கோடி வரை வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வசூலை தமிழ்நாட்டில் முறியடித்துள்ளது. அதே போல் வட இந்தியாவிலும் ஜெயிலர் படத்தை விட லியோ படத்தின் வசூல் தான் அதிகம்.

வட இந்தியா, தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற சில இடங்களையும் சேர்த்து லியோ ரூ. 55 கோடி வரை வசூல் செய்து, ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் வித்தியாசத்தில் உள்ளது. ஆனால், ஜெயிலர் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட அமெரிக்காவை சேர்த்து ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதில் ஜெயிலரின் ரூ. 85 கோடியில் லியோவின் ரூ. 55 கோடியை கழித்தால் ரூ. 30 கோடி வித்தியாசத்தில் ஜெயிலர் படம் தான் முன்னிலையில் இருக்கிறது. இதை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் இரு படங்களுக்கும் ரூ. 50 லட்சம் அல்லது ரூ. 60 லட்சம் வரை மட்டுமே தான் வசூல் வித்தியாசம் உள்ளது.

 

ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கவில்லை..ஆதாரத்துடன் தகவல்கள் இதோ | Leo Failed To Beat Jailer Total Collection

ஆகையால் ரூ. 30 கோடி முதல் ரூ. 35 கோடி வரை வித்தியாசம் உள்ளதால் லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க வில்லை என ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. தற்போது வரை நம்பர் 1 இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ஜெயிலர் தான் உள்ளது.

ஆனால், சமூக வலைத்தளத்தில் சிலர் வெளியிடும் பதிவுகளில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அது உண்மையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெயிலர் வசூல்                                                                                லியோ வசூல்

தமிழ்நாடு - ரூ. 205 கோடி                                                                 தமிழ்நாடு ரூ. 218 கோடி

 

ஆந்திரா மற்றும் தெலுங்கானா - ரூ. 88 கோடி                             கேரளா - ரூ. 59 கோடி                  

கேரளா - ரூ. 58.50 கோடி                                                                 கர்நாடகா ரூ. 40 கோடி

 

கர்நாடகா - ரூ. 71. 50 கோடி                                                            ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரூ. 47 கோடி

Rest Of India - ரூ. 17 கோடி                                                             Rest Of India - ரூ. 35 கோடி

 

வெளிநாடு - ரூ. 195 கோடி                                                              வெளிநாடு - ரூ. 198 கோடி

 

மொத்தத்தில் - ரூ. 635 கோடி                                                          மொத்தத்தில் ரூ. 597+ கோடி

LATEST News

Trending News

HOT GALLERIES