ஜீ தமிழின் இதயம் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ள நடிகை ஜனனி.. அவர் போட்ட பதிவு
ஜீ தமிழில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று இதயம்.
கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த இதயம் சீரியல் 650 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. 2 சீசன்களாக வேறு ஒளிபரப்பாகிறது.
இதில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பிரபலமாகியுள்ளார் நடிகை ஜனனி.
அவருக்கு திரைப்பயணத்திற்கு பெரிய ரீச் கொடுத்த இதயம் சீரியலில் இருந்து விலகுவதாக திடீரென ஒரு பதிவு போட்டுள்ளார் நடிகை ஜனனி.
இதயம் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியவர் அடுத்து தனது புதிய பயணத்திற்காக ஆவலாக காத்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார்.