திருமணத்திற்கு பின் கணவருடன் ரொமான்ஸில் சிக்ஸ் அடிக்கும் ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் நபரானா லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.
ரம்யா பாண்டியனின் கணவர் யோகா மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரியும்தான். தொடக்கத்தில் யோகா கிளாஸுக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கும் தவானுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றார். தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்து எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.