அதிக சம்பளம் பெரும் டாப் 10 நடிகர்கள்..! 8வது இடத்தில் இருப்பது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

அதிக சம்பளம் பெரும் டாப் 10 நடிகர்கள்..! 8வது இடத்தில் இருப்பது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Forbes நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

வருடா வருடம் இந்த பட்டியலை வெளியிடும் Forbes நிறுவனம் இந்த முறையும் பல ஆச்சரியங்களுடன் கூடிய பட்டியலை வெளியிட்டு திரையுலகை அதிர வைத்துள்ளது. 

கடந்த 2015 முதல் 2018 வரை இந்திய நடிகர்கள் சம்பள பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக எட்டு இடத்திற்கு தள்ளப்பட்டது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீப காலமாக சல்மான் கான் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புஷ்பா ராஜ்ஜியம்: அல்லு அர்ஜுன் முதலிடம், தளபதி விஜய் இரண்டாம் இடம்! தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், புஷ்பா திரைப்படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகருமான அல்லு அர்ஜுன், Forbes நிறுவனத்தின் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை தட்டி சென்று புதிய சாதனை படைத்துள்ளார். 

top 10 highest paid actors indiaநடிகர் விஜய் இரண்டாம் இடத்தையும், பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் அமீர்கான் ஐந்தாவது இடத்திலும், பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் ஆறாவது இடத்தையும், அஜித் குமார் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் ஒன்பதாவது இடத்திலும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Rank நடிகரின் பெயர் தோராய சம்பளம் சமீபத்திய ரிலீஸ்
1. அல்லு அர்ஜுன் 300cr புஷ்பா 2 : தி ரூல்
2. ஜோசப் விஜய் 130cr to 275cr ஜனநாயகன் (Upcoming), GOAT, லியோ
3. ஷாருக் கான் 150cr to 250cr டங்கி
4. ரஜினிகாந்த் 125cr to 270cr வேட்டையன், ஜெயிலர்
5. அமீர் கான் 100cr to 275cr லால் சிங் சத்தா
6. பிரபாஸ் 100cr to 200cr கல்கி 2898 AD
7. அஜித்குமார் 105cr to 165cr துணிவு
8. சல்மான் கான் 100cr to 150c டைகர்
9. கமல்ஹசன் 100cr to 150cr இந்தியன் 2
10. அக்ஷய் குமார் 60cr to 145cr கேல் கேல் மேய்ன்

LATEST News

Trending News