பொங்கல் ரேஸில் வெளியான தலைவர் தம்பி தலைமையில், வா வாத்தியார் படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது.. இதோ முழு விவரம்
இந்த 2026 பொங்கல் ரேஸில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் சர்ப்ரைஸ் என்ட்ரியாக இருந்தன.
ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸான பராசக்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி வெளிவந்த வா வாத்தியார் படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதுவரை வா வாத்தியார் படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்பின், ஜனவரி 15ஆம் தேதி வெளிவந்த ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு சூப்பர் ரிசல்ட் கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படம் 3 நாட்களை கடந்துள்ள நிலையில், ரூ. 11+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
