டாக்ஸிக் யாஷின் அந்த காட்சியில் நடித்த மாடல் நடிகை!! தீடீர் எடுத்த அதிரடி முடிவு..
இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் டாக்ஸிக். ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகி பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது இப்படம்.
படத்தில் கியாரா அத்வானி, நயன் தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா என பல நடிகைகள் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வீடியோ வெளியானது.

அதில் காரில் யாஷ், மாடல் நடிகையுடன் அந்தரங்கமாக நடந்து கொண்டதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனத்தை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த காட்சியில் நடித்திருந்த நடிகை பீட்ரிஸ் டாபென்பாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.