விஜய் - சங்கீதா விவாகரத்து..அடுத்தவர்கள் பாத்ரூமை எடுப்பார்ப்பது!! நடிகர் ஆரி கொடுத்த ரியாக்ஷன்..
நடிகர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் என் கணவர் விஜய் இருக்கிறார் என பல காரணங்களை முன்வைத்து விவாகரத்து மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை முன் வைத்து வரும்நிலையில், நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரியிடம் விஜய் - சங்கீதா விவாகரத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகர் ஆரி, நடிகராக மட்டுமில்லை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரைப்பற்றியும் பேச யாருக்கும் உரிமை இல்லை. பொது வாழ்க்கைக்கு வரும்போது இதுபோன்ற விஷயங்கள் முன் வைக்கப்படுகிறது. அது ஒரு விவாதப் பொருளாக்கப்படுகிறது. முன்பெல்லாம், பத்திரிக்கையாளர்கள், மீடியாக்கள் மட்டும் இருந்தன.
அவர்கள் ஒரு செய்தி சரியா, தவறா என்று ஆராய்ந்த பின் வெளியிடுவார்கள். ஆனால் இப்போது பொய் செய்தியாகிவிடுகிறது. உண்மையை சொல்வதற்கு ஒரு மீட்டிங் போடவேண்டி இருக்கிறது. இது மிகவும் அபாயகரமான சூழம். விஜய், சங்கீதா விஷயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது, திருமணம், விவாகரத்து அவருக்கு மட்டும் நடக்கவில்லை. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அது இரண்டு பேரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். அதில் தனிமனிதராக இருந்து கொண்டு கருத்து சொல்ல முடியாது. அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிப்பார்ப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை, பாத்ரூமையோ, படிக்கையையோ எட்டிப்பார்க்கும் கலாச்சாரம் மிகவும் அசிங்கமாகவுள்ளது. அவரின் அரசியல் பற்றி விவாதிக்கலாம். தனி மனித தாக்குதல் என்பது மிகவும் தவறானது.
பல மீடியாக்களில் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை பற்றிய விவாதமே நடத்துக்கிறார்கள். ஒரு பெண்ணுடன் ஆண் தானே இருக்கிறார், அந்த ஆணைப்பற்றி யாருமே பேசாமல் இருக்கிறோம், அந்த பெண்ணைப்பற்றி தான் எப்போதும் பேசுகிறோம். ஒரு ஆணின் வீரத்தை ஒரு பெண்ணின் ஆடையில் கொண்டு வந்துவிடுகிறோம் என்று சரமாரியாக பதிலளித்துள்ளார் நடிகர் ஆரி.