டாக்ஸிக் பட நாயகி ருக்மிணி கமிட்டாகிட்டாரா? வைரலாகும் காதலர் புகைப்படம்...
கன்னடத்தில் வெளிவந்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியவர் நடிகை ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் ருக்மிணி வசந்த் இன்று மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
மேலும், நடிகர் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் இருக்கிறார். இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார் ருக்மிணி.

இந்நிலையில் ருக்மிணி தன்னுடைய காதலருடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தை சித்தார்த் என்பவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
