தினமும் உடலுறவு.. மகள் என்று கூட பார்க்காமல் என்னை.. தன்னுடைய தந்தை குறித்து சோனா கூறிய பகீர் தகவல்..!
பிரபல கவர்ச்சி நடிகை சோனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பல அதிர்ச்சி தரும் வாழ்க்கை சம்பவங்களை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் 14 வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். இதனால், எது சரி தவறு என்று எனக்கு தெரியாது. ஒருநாள் வயதான கிழவன் என்னிடம் டபுள் மீனிங்கில் பேசி சிரித்தார்.
என் அப்பா மாதிரி ஒரு மோசமான மனிதரை பார்த்தது இல்லை. தினமும் ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பார். பெண்கள் என்றாலே உடலுறவு கொள்ளக்கூடிய ஒரு பொருளாகத்தான் அவர் பார்ப்பார்.
மகள் என்று கூட பார்க்காமல், தனது தந்தை தன்னை சிறுவயதிலிருந்தே "மோசமானவள்", "ரொம்ப கெட்ட பொண்ணு", "கேரக்டர் சரியில்லை" என்று தொடர்ந்து விமர்சித்து வந்ததாகவும், இது தனது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
தந்தையின் இந்த கடுமையான வார்த்தைகள், சோனாவின் இளம் மனதை ஆழமாக காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவரது எதிர்கால பாதையையே மாற்றி அமைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
என் பாட்டி வீட்டில் தான் ஒரு பக்கம் அவரும் இன்னொரு பக்கம் வேறொரு பெண்ணும் நிற்பார்கள். அப்போது பஞ்சாயத்து நடக்கும். தினமும் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் என் அம்மா மிகவும் சிரமப்பட்டார்.
பின்னர் என் அப்பா எங்களை விட்டு சென்றதும் நான் அம்மாவுக்காகவே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், "சினிமாவில் நடிக்க வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் உள்ளது. அப்படி என்னை அழைத்த பலரையும் நான் அறைந்து இருக்கிறேன். எனக்கு பலமுறை கெட்ட அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது.
ஆனால் என்னிடம் பலரும் உன்னை வைத்துக்கொள்கிறேன் என்று தான் சொன்னார்கள். திருமணம் செய்து கொள்கிறேன் என்று யாரும் சொல்லவில்லை. இதனால் எனக்கு திருமணம் ஆகவில்லை.
நான் பல பார்ட்டிகளுக்கு சென்றிருக்கிறேன். அதில் பல முன்னணி நடிகர்கள் குடிபோதையில் என்னிடம் தவறாக நடந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தப்பித்து விடுகிறார்கள். நான் மட்டும் தான் பலி ஆடாகி இருக்கிறேன்.
அவர்கள் செய்த தவறுக்கு நான் ஏன் பலியாடாகி அவமானப்பட வேண்டும். எனக்கு திருமண வாழ்க்கை மீது வெறுப்பு வந்து விட்டது. அதனால் நான் இப்பொழுது திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
எனக்கு ஒரு ஆண் நண்பர் இருக்கிறார். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் எனக்கு அவர் மீது காதல் இல்லை. நான் தனியாக சந்தோஷமாக வாழ்கிறேன்" என்று கூறியுள்ளார்.