யார பாத்து ஆண்ட்டின்னு கூப்பிட்ட!! ரசிகரை கோபத்தில் சுளுக்கு எடுத்த புஷ்பா பட நடிகை..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து ரங்கஸ்தலம், புஷ்பா 1, புஷ்பா2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுசுயா பரத்வாஜ். மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தமன்னாவிற்கு பின் தொகுத்து வழங்கி வந்தார். நடிப்பை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
சமீபத்தில் தன் கணவர் பற்றியும் படுக்கையறை விஷயம் குறித்து பேசி அதிர்ச்சி கொடுத்தார். 2 குழந்தைகள் இருக்கிறது, ஆனால் 3வது குழந்தைக்கு என் கணவர் ஒத்துழைப்பு தரவில்லை, எப்போது வேலை வேலைன்னு இருக்கிறார், அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். 39 வயதை எட்டிய அனுசுயாவும் மக்களோடு மக்களாக சேர்ந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ஆண்ட்டி என அழைத்துள்ளார்.
இதனால் கடுப்பான அனுசுயா, துணிச்சல் இருந்தால் மேடைக்கு வா, நான் யார் என்று காட்டுகிறேன், என்னை தூண்டிவிட்டால் விளைவு எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன் என கோபமாக பேசியுள்ளார். அவர் அப்படி நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.