விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம்.. திடீரென பெயரை மாற்றிய ஹன்சிகா.. காரணம் என்ன
திரையுலகில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஹன்சிகா கடந்த 2022ஆம் ஆண்டு சொஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணம் முடிந்து சில ஆண்டுகளே ஆகும் நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தொடர்ந்து விவாகரத்து குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், நடிகை ஹன்சிகா இந்த செய்தியை ஒப்புக்கொள்ளவும் இல்லை, அதனை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகா தற்போது தனது பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார். இதுவரை "Motwani" என இருந்த பெயரில், "Motwanni" என பெயரில் மாற்றம் செய்துள்ளார்.
இந்த மாற்றம் ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு நியூமராலஜி காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.