நடிகை ஹுமா குரேஷி போட்டு இருக்கிற இந்த T-shirt!! எவ்ளோ தெரியுமா
பாலிவுட்டில் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான Gangs of Wasseypur என்ற படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை ஹூமா குரேஷி. இதன்பின் 'எக் தி தாயன்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாக ஜொலித்தார்.

பாலிவுட்டில் நடித்தும் மராத்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஹூமா குரேஷி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஜெரீனா என்ற ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனையத்து நடிகர் அஜித் குமாரின் வலிமை படத்தில் முக்கிய ரோலிலும் நடித்தார். பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் ஹூமாவிற்கு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் விமான நிலையத்திற்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டி சர்ட் அணிந்து சென்ற ஹூமாவின் அந்த ஆடையின் முன்பக்கம் சரியாக காணப்பட்டும் பின்பக்கம் கிழிந்தும் காணப்பட்டுள்ளது.
Cotton Balenciaga பிராண்ட்டை சேர்ந்த இந்த டி-சர்ட்டின் விலை சுமார் ரூ. 65000 என்று கூறப்படுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு ஆடையா? அதுவும் இத்தனை ஆயிரமா என்று கிண்டல் செய்து வந்தனர்.

