டியூட் படத்தில் சின்ன ரோல் தான்!! யார் இந்த ஐஸ்வர்யா சர்மா..புகைப்படங்கள்
தமிழில் இரு படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தற்போது இளைஞர்களால் கொண்டாடப்படும் நடிகராக திகழ்ந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம்தேதி டியூட் படம் வெளியானது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மமிதா பைஜு நடித்துள்ள இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சரத்குமார், ரோஹினி, சலீம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் சிறு ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா சர்மா.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஐஸ்வர்யா சர்மா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.