மகள் அன்வியுடன் தீபாவளி கொண்டாட்டம்!! ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியின் ரியாக்ஷன் இதான்...
2025 ஆம் ஆண்டின் தீபாவளியை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடினர். சினிமா பிரபலங்கல் பலரும் வாணவேடிக்கை வெடித்து கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.
அந்தவகையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது கிடைத்தது. சில வாரங்களுக்கு முன் தன்னுடைய மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இந்நிலையில் தன்னுடைய மகள் அன்வியுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார் ஜிவி பிரகாஷ். அவர் வெளியிட்ட வீடியோவில், தன் மகள் அன்வி-ஐ காரின் மேலே அமர்ந்து கொண்டு காதை பொத்திக்கொள்ள, ஜிவி பிரகாஷ் குமார் வாணவேடிக்கையை வைத்துவிட்டு ஓடி அவர் அருகே சென்று நின்றுள்ளார்.
இந்த வீடியோவுக்கு ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவி சைந்தவி லைக் போட்டு தன்னுடய ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.