திடீர் விவாகரத்து..? காரணம் இது தான்..? ரம்யா கிருஷ்ணன் பரபர விளக்கம்..!
1980-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். பின்னர், குணச்சித்திர வேடங்களிலும், பக்தி படங்களில் அம்மன் வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பாகுபலி படத்தில் ராஜமாதாவாக கம்பீரமாக நடித்து மேலும் புகழ் பெற்றார். இப்படி திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து 2003-ல் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ண வம்சி இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.
இந்த வதந்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவாகரத்து வதந்திக்கு கிருஷ்ண வம்சி அவர்களே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், என்னைப் பற்றி என்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின்றன. விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கூறுகிறார்கள். விவாகரத்து செய்து விட்டேன் என்று கூட கூறுகிறார்கள்.
அதற்கு இதுதான் காரணம் என்று ஏதாவது கூறுகிறார்களா..? என்றால் இல்லை. எத்தனையோ பிரபலங்கள் விவாகரத்து செய்கிறார்கள். பத்தோடு பதினொன்றாக என்னைப் பற்றிய வதந்திகளும் வலம் வருகிறது.
நான் விவாகரத்து செய்கிறேன் என்றோ.. என் விவாகரத்து இதுதான் காரணம் என்று எதையுமே நான் சொன்னது கிடையாது.. அப்படி இருக்கும்போது எதற்காக இப்படியான செய்திகள் எல்லாம் பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை"நான் தற்போது படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத்தில் இருக்கிறேன்.
ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதை வைத்துக்கொண்டு நாங்கள் பிரிய இருப்பதாக வதந்திகளை பரப்பி உள்ளனர்.
இதில் துளியும் உண்மை இல்லை. நாங்கள் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் இப்படி வதந்தி பரவி இருக்கலாம். ஆனால், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஒன்றாகவே சென்று வருகிறோம்.
நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்துள்ளோம். ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை நேசிப்பவர். மிகவும் புத்திசாலி" என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கிருஷ்ண வம்சியின் இந்த விளக்கத்தின் மூலம், ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி விவாகரத்து வதந்தி வெறும் புரளி என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவும், அன்போடும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. வதந்தி பரப்பியவர்களுக்கு கிருஷ்ண வம்சியின் இந்த பதில் ஒரு சரியான பதிலாக அமைந்துள்ளது.