குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!

குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!

பிரபல நடிகை காஜல் அகர்வால், தாய் ஆன பிறகும் தனது தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்துகொள்ளாமல், சத்யபாமா திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த அனுபவத்தை மனம் திறந்து பேசியுள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சனை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தைக்கு தாயானார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, இயக்குனர் சுமன் சிக்கலா இயக்கத்தில் சத்யபாமா திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

சத்யபாமா திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு வந்தபோது, அவர் முதலில் தயங்கினார். கைக்குழந்தையுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வது கடினம் என்று அவர் இயக்குனரிடம் தெரிவித்தார். 

ஆனால், இயக்குனர் சுமன் சிக்கலா, இந்த கதாபாத்திரம் காஜல் அகர்வாலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாக கூறி, அவரை டார்ச்சர் செய்து சம்மதிக்க வைத்தார். 

படப்பிடிப்பு திருப்பதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு குக்கிராமத்தில் நடைபெற்றது. இது காஜல் அகர்வாலுக்கு மேலும் சவாலாக அமைந்தது. குழந்தையை விட்டுப் பிரிந்து நீண்ட நேரம் படப்பிடிப்பில் இருக்க வேண்டிய சூழ்நிலை. 

இருப்பினும், காஜல் அகர்வால் தனது தொழில் மற்றும் தாய்மை கடமை இரண்டையும் சரியாக செய்ய திட்டமிட்டார். படப்பிடிப்பு தளத்தில் இருந்துகொண்டே தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு புதுமையான முறையை அவர் கையாண்டார். 

இது குறித்து காஜல் அகர்வால் கூறுகையில், "என்னால் படப்பிடிப்பு கெட்டுப் போய் விடக்கூடாது அதேசமயம் என்னுடைய குழந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் என நினைத்தேன். 

படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு இயற்க்கைக்கு எதிரான முறையில் என் மார்பில் Maunal Pump-ஐ வைத்து என்னுடைய பாலை எடுத்து என்னுடைய டிரைவரிடம் கொடுத்து என்னுடைய குழந்தைக்கு அனுப்பி வைப்பேன். 

அவர் வீட்டுக்கு சென்று சேர்வதற்குள் அங்கிருந்து இன்னொரு டிரைவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என்னுடைய குழந்தைக்கு நான் என்னுடைய தாய்ப்பாலை அனுப்பி கொண்டு இருந்தேன்" என்றார். 

இந்த அனுபவம் குறித்து மேலும் பேசிய காஜல் அகர்வால், "எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் இந்த அனுபவம் எனக்கு புதுமையாகவும், கொடுமையாகவும் இருந்தது. ஆனாலும் கூட என் குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை நான் செய்கிறேன் என்ற ஆத்ம திருப்தி இருந்தது" என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.

குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை காஜல் அகர்வால் இந்த செயல் மூலம் உணர்த்துகிறார். 

அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் எதையும் சாதிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். நடிகை காஜல் அகர்வால், தாய்மை பாசத்தையும், தொழில் கடமையையும் ஒருங்கே கையாண்ட இந்த நிகழ்வு பலருக்கும் உந்துதலாக அமைந்துள்ளது.

LATEST News

Trending News