எவ்ளோ எடுத்து சொருகியும் உள்ள போகல.. அவதிப்படும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ..!
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான அந்தோணி தட்டில் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிறகும், திரையுலகில் முன்பு போலவே பிஸியாக நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்பும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு கலகலப்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சுருட்டை முடியை அடக்க முடியாமல் அவதிப்படுவதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளார். வீடியோவில், கீர்த்தி சுரேஷ் தனது சுருட்டை முடியை எடுத்து உள்ளே சொருக முயற்சிக்கிறார்.
ஆனால், அவரது முடி அடங்காமல் மீண்டும் மீண்டும் வெளியே வந்து தொல்லை கொடுக்கிறது. முடியை எவ்வளவு தான் அடக்க நினைத்தாலும் அது கேட்காமல் போக்கு காட்டுவதை வேடிக்கையாகவும், கியூட்டாகவும் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
வீடியோவிற்கு கேப்ஷன் கொடுக்கும் போது, "சுருட்டை முடி உள்ளவர்கள் இந்த பிரச்சனையை உங்களுடைய பிரச்சனையுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறதா என்பதை கமெண்ட் செய்யுங்கள்" என்று மற்ற சுருட்டை முடி கொண்டவர்களை வினவியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் கீர்த்தி சுரேஷின் கலகலப்பான வீடியோவை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரபலங்கள் பலரும் சுருட்டை முடி குறித்து நகைச்சுவையான கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.