வித் லவ் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு.. இதுவரை வந்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் எப்போதுமே தரமான திரைப்படங்களுக்கு மக்களுக்கு மத்தியில் ஆதரவு இருக்கும். அது தமிழ் படம் என்று மட்டுமில்லாமல், வேற்று மொழி படங்களாக இருந்தாலும் ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுப்பார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த வித் லவ் படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்து, திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இந்நிலையில், ஆறு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் வித் லவ் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 16.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.