தலைவா படத்தில் வரும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா. பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சத்யராஜ், சந்தானம், அமலா பால், பொன்வண்ணன், அபிமன்யு சிங், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ராகினி நந்தவானி. இவர் தெலுங்கு மற்றும் மலையாளங்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை ராகினி நந்தவானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த பலரும், தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையா இது? ஆளே அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ நீங்களே புகைப்படத்தை பாருங்க..