முதல்முறையாக ரொமான்ஸ் ஹீரோவாகும் விஜய் ஆண்டனி.. நாயகி இந்த பிரபல நடிகையா!!
தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இதுவரை அதிரடி ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்த நிலையில் தற்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு ’ரோமியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் ’அக்னி சிறகுகள்’ ’மழை பிடிக்காத மனிதன்’ உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இதுவரை அதிரடி ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் படங்களை மட்டும் தேர்வு செய்து வந்த விஜய் ஆண்டனி முதல் முறையாக முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாயகனாக நடிக்க உள்ளார்.
‘ரோமியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’சூப்பர் டீலக்ஸ்’ ’சாம்பியன்’ ’கோப்ரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.