'குக் வித் கோமாளி' ரக்சன் சம்பளம் இவ்வளவா?

'குக் வித் கோமாளி' ரக்சன் சம்பளம் இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி. சனி ஞாயிறு எப்போது வரும் என்று பார்வையாளர்கள் காத்திருந்து அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மூன்று சீசன்களையும் ரக்சன் தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்சன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமன்றி அவ்வப்போது செஃப்களுடன் இணைந்து காமெடி செய்வதிலும் குக்குகளுடன் சேர்ந்து சமைப்பதும் கோமாளிகள் உடன் சேர்ந்து ஆட்டம் போடுவதும் பார்வையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இந்த நிலையில் ரக்சனுக்கு ஒரு எபிசோடுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோமாளிகளுக்கு ஒரு எபிசோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் என்று அவ்வப்போது பாலா, மணிமேகலை கூறி வந்த நிலையில் தொகுப்பாளருக்கு தொகுப்பாளர் ரக்சனுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபத்தில் சிறந்த தொகுப்பாளர் விருதையும் ரக்சன் பெற்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

LATEST News

HOT GALLERIES