வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சல்: பணமோசடி விவகாரம் குறித்து ஆர்யா

வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சல்: பணமோசடி விவகாரம் குறித்து ஆர்யா

பிரபல நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை பெண் ஒருவர் நடிகர் ஆர்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் தன்னை ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் இதற்காக 70 லட்ச ரூபாய் தான் அவருக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்போது அவர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ஆர்யா போலவே இலங்கை தமிழ் பெண்ணிடம் ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்யா போல பேசி இவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அந்த பெண்ணிடம் பணம் ஏமாற்றி வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு தனது நன்றி என டுவிட்டரில் ஆர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது நான் வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.

LATEST News

Trending News