கெட்டவார்த்தை எங்க அப்பா சொல்லி கொடுத்தார்! பதிலடி கொடுத்த சீரியல் நடிகை கேப்ரியல்லா..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும். ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன.
ஆனால் அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது. தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். சிரியல் கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், கேப்ரியல்லா சன் டிவியை விட்டு கிளம்புவதால் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக உள்ளது.
கேப்ரியல்லா அவரது கணவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே, கேப்ரில்லாவே ஒரு பேட்டியில் சீரியலில் நடிக்க கணவருக்கு பிடிக்காது, அம்மாவுக்கு பிடிக்கும் என்பதால் தான் நடிக்க கேட்டு ஓகே வாங்கினார். ஒரு காட்சியில் என் உடல் பாகங்கள் தெரிந்ததை ஆகாஷிடம் சொன்னபோது அசால்ட்டாக இருக்கட்டும் என்று பதிலளித்தார்.
ஆனால் இதுகுறித்து கேப்ரியல்லா எந்த ஒரு இடத்திலும் அதிகாரப்பூர்வமான தகவலை கூறவில்லை என்பதும் இணையத்தில் இதுபோன்ற செய்தி உலா வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இணையத்தில் விவாகரத்து விஷயம் வெளியாகி வரும் நிலையில், கேப்ரியல்லா கமல் ஹாசன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் கமல், சினிமா பார்த்து கெட்டுப்போறாங்க, அதனால் சென்ஸ்சார் வேணும் சொல்றாங்க.
எனக்கு கெட்டவார்த்தை, எம்ஜிஆர், சிவாஜி சொல்லித்தரல, என் அப்பா தான் சொல்லி கொடுத்தார் என்று கூறியிருக்கிறார். தற்போது கேப்ரியல்லா இந்த வீடியோவை பகிர்ந்தது எதற்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.