தளபதி விஜய் படத்தில் பாட்டு பாடிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.. புகைப்படத்தை வெளியிட்ட டி. இமான்

தளபதி விஜய் படத்தில் பாட்டு பாடிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.. புகைப்படத்தை வெளியிட்ட டி. இமான்

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், ரசிகர்களை தாண்டி, மக்கள் மனதிலும் பல திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளது.

அதில் ஒன்று தான் மஜித் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

திரையுலகில் இதுவே நடிகை பிரியங்கா சோப்ராவின் அறிமுக படமாகும். மேலும் இப்படத்தின் மூலமாக தான், தற்போதைய முன்னணி இசையமைப்பாளர் டி. இமான் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்று இருக்கும், 'உள்ளதை கிள்ளாதே' பாடலை விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து பாடியிருந்தார்.

அந்த புகைப்படத்தை தற்போது டி. இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.. 

LATEST News

Trending News

HOT GALLERIES