பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

 

'ஹாய்'

அறிமுக இயக்குநரும், பிரபல பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவான திரைப்படம் 'ஹாய்'. இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு, மறைந்த நடிகர் பாக்யராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

கவின் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால், 'ஹாய்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் கலெக்ஷன் அதிகரித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் 'ஹாய்' திரைப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES