Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்

சந்தீப் ரெட்டி வங்கா, பிரணாய் ரெட்டி வங்காவின் தயாரிப்பில் வேணு கோபால் ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ரோமாஞ்சகம் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

 

கதைக்களம்

நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க திட்டமிடுகிறார் அன்விஷ் (சுமந்த் பிரபாஸ்). அவரது அப்பாவின் ஆதரவு இல்லாத நிலையில், டேட்டிங் ஆப் ஒன்றை நிறுவும் அன்விஷ்; அதற்கு ரோமாஞ்சகம் என்று பெயர் வைக்கிறார்.

அந்த ஆப் மூலம் சென்னைச் சேர்ந்த மைதிலியை (அனந்திகா சனில்குமார்) தொடர்பு கொள்கிறார் அன்விஷ். மைதிலி மீது ஈர்ப்பு கொள்ளும் அன்விஷ் அவளிடம் நெருங்கி பழகி காதலிக்க ஆரம்பித்தால், ரோமாஞ்சகம் டேட்டிங் ஆப் ஐடியா வெற்றி பெறும் என்று நண்பர்களும் கூறுகிறார்கள்.

 

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம் | Romanchakam Telugu Movie Review

தெரியாத நபரிடம் எப்படி விவரங்களைக் கூறுவது என்று மைதிலி சில டெஸ்ட்களை அன்விஷிற்கு வைக்க, அவர் அனைத்திலும் பாஸ் செய்து விடுகிறார். அன்விஷின் பேச்சும், அணுகுமுறையும் மைதிலியை ஈர்க்க இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். ஒருநாள் சர்ப்ரைஸாக மைதிலியை பார்க்க அன்விஷ் சென்னை சென்றுவிடுகிறார். அங்கு ஹோட்டல் ஒன்றுக்கு மைதிலியை வரச்சொல்லி அன்விஷ் காத்திருக்கிறார்.

ஆனால், பல மணிநேரமாகியும் வராதா மைதிலி வாட்ஸ்அப் முதல் Gpay வரை அனைத்திலும் அன்விஷை பிளாக் செய்துவிடுகிறார். எதனால் மைதிலி இப்படி செய்தார் என்ற குழப்பத்துடனே ஊர் திரும்பும் அன்விஷ், தனது வேலையை பார்க்க முடியாமல் தடுமாறுகிறார். மைதிலி ஏன் அப்படி செய்தார்? அவரும் அன்விஷும் இணைந்தார்களா? என்பதே காமெடி கலந்த மீதிக்கதை.

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம் | Romanchakam Telugu Movie Review

படம் பற்றிய அலசல்

அறிமுக இயக்குநர் வேணு கோபால் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா, பிரணாய் ரெட்டி வங்கா தயாரித்துள்ளனர். காமெடி டிராமா படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பு ஏற்படா வண்ணம் நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.

சிம்பிளாக ஹீரோவை அறிமுகம் செய்துவிட்டு, ஹீரோயினை பாடலுடன் அறிமுகப்படுத்தி ஜென் சி கிட்ஸை ஈர்த்துள்ளார் வேணு கோபால் ரெட்டி. ஹீரோவும், அவரது நண்பர்களும் சகஜமாக பேசிக்கொள்வது அவ்வளவு எதார்த்தமாகவும், ரசிக்கும் வகையிலும் உள்ளன. தமிழில் ஹிட்டான கப்பல், மலையாளத்தில் சக்கைபோடுபோட்ட பிரேமலு படங்களின் பாணியில் படம் முழுக்க ஜாலி ரைட்தான்.

 

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம் | Romanchakam Telugu Movie Review

என்றாலும் ஒரு சில இடங்களில் ட்விஸ்ட் வைத்து கொஞ்சம் மிஸ்டரி திரில்லர் பாணியிலும் திரைக்கதையை நகர்த்தியது புத்திசாலித்தனம். மேம் பேமஸ் என்ற படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்திருந்த சுமந்த் பிரபாஸ் தான் ரோமாஞ்சகம் படத்தின் கதாநாயகன். படம் முழுக்க துறுதுறுவென ஆக்டிவாக எதையாவது செய்து கவனம் ஈர்க்கிறார்.

அவரது வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்திலும் காமெடியை வெளிப்படுத்துகிறார். ஹீரோயின் அனந்திகா பார்ப்பதற்கு வெகுளியாகவும், சில வேலைகளை செய்யும்போது என்னப்பா இந்த பொண்ணு இப்படி பண்ணுது என்பது போலவும் எதார்த்தமாக நடித்துள்ளார்.

 

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம் | Romanchakam Telugu Movie Review

ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக வரும் நாகேந்திர ரவி படம் முழுக்க ஒன் லைன் காமெடியால் திரையரங்கை அலறவிடுகிறார். மேலும் பங்கிற்கு உபேந்திரா லிமாயி போலீஸாக வந்து ஸ்கோர் செய்கிறார். அவர் கொடுக்கும் ரியாக்ஸனிலேயே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. படத்திற்கு மற்றொரு பக்கபலமாக இருப்பது வாசுகி வைபவின் இசைதான்.

பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் அசத்தியுள்ளார். பவன் குமார் பாப்புலாவின் ஒளிப்பதிவு நேர்த்தி; இயக்குநரான வேணு கோபால் ரெட்டியே படத்தொகுப்பை சிறப்பாக செய்துள்ளார்.  

க்ளாப்ஸ்

நடிகர்கள்

காமெடி காட்சிகள்

திரைக்கதை

பாடல்கள் மற்றும் பின்னணி இசை

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் இந்த ரோமாஞ்சகம் இளைஞர்களை ஈர்க்கும். ஜாலியாக பார்க்கக் கூடிய படம்.

Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம் | Romanchakam Telugu Movie Review

LATEST News

Trending News

HOT GALLERIES