இந்த திரைப்படத்தை பார்த்துதான் இயக்குநர் ஆக வேண்டும் என நினைத்தேன் - ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்
தளபதி விஜய் இன்று சினிமா தாண்டி அரசியலிலும் உச்சத்தை தொட்டுவிட்டார். இவர் முதலமைச்சராக ஒரு பக்கம் பட்டாசு வெடிக்க, மறுப்பக்கம் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் கால் பதித்துவிட்டார்.

இனி அப்பாவின் திரைப்பயணத்தை மகன் கொண்டு செல்வார் என்பது போல் 'சிக்மா' படத்தின் மூலம் சஞ்சய் இயக்குநராக களமிறங்க, அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சஞ்சய் கலந்து வருகிறார்.

ஓபன் டாக்
அப்போது அவரிடம் "சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என உங்களுக்கு எந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என கேட்க, அதற்கு சஞ்சய், "பிரேசில் நாட்டு படம் 'சிட்டி ஆஃப் காட்', அந்த கேங்ஸ்டர் படம்தான்" என பதில் அளித்துள்ளார்.
மேலும், சஞ்சய் ரசிகர்கள் தொகுப்பாளர் கேள்விகள் அனைத்திற்கும் செம ஜாலியாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.