9 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

9 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஹாய் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

ஹாய்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் கவின். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஹாய். இப்படத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மாஸ்டர், விக்ரம், கருப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஹாய் திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

 

9 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kavin Hi Movie 9 Days Box Office

அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES