இளையராஜாவை புகழ்ந்த ஆண்ட்ரியா.. அனிருத்துக்கு ஊமை குத்தா?.. இப்படி சொல்லிட்டாங்களே?

இளையராஜாவை புகழ்ந்த ஆண்ட்ரியா.. அனிருத்துக்கு ஊமை குத்தா?.. இப்படி சொல்லிட்டாங்களே?

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. இந்நிலையில் இளையராஜாவை எக்கச்சக்கமாக புகழ்ந்திருக்கிறார்.

நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் தனித்துவமான குரலுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea Praises Ilaiyaraaja s Timeless Music Indirect Dig at Ex-Lover Anirudh

நடிகையான ஆண்ட்ரியா: பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது.

செல்வராகவன் ஹீரோயின்: இதனையடுத்து சில வருடங்கள் நடிக்காமல் பாடுவதில் கவனம் செலுத்திய ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். வரலாற்று ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்ற ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவனில் சிறந்த நடிப்பை வழங்கினார். அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி பாடல் பாடவும் செய்தார். ஆயிரத்தில் ஒருவனில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி நடிகை: அதன்படி அஜித் நடித்த மங்காத்தா, கமல் நடித்த விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை, தனுஷ் நடித்த வடசென்னை என ஏராளமான தமிழ் படங்களிலும், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட மலையாள படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

அனிருத்துடன் காதல்: இதற்கிடையே அவர் பாடகியாக இருந்தபோது இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்தார். இரண்டு பேரும் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை; இரண்டு பேரின் காதலும் பாதியில் முடிந்தது. அனி அடுத்த மாதம் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளை திருமணம் செய்யவிருக்கிறார். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஆண்ட்ரியா பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று இளையராஜாவின் பாடல்களை பாடினால் இப்போது அவ்வளவு வரவேபற்பு கிடைக்கிறது. அந்தப் பாடல்கள் எல்லாம் நான் பிறப்பதற்கு முன்னதாகவே வந்தவை. ஆனாலும் இளைஞர்கள் அவ்வளவு ரசிக்கிறார்கள். சில பாடல்கள் 15 நொடிகள் பிரபலமாக இருந்துவிட்டு அடுத்த பாடல் வரும்போது மறந்துபோகலாம். ஆனால் காலத்தை கடந்து நிற்கும் இசை எப்பவும் அப்படியே இருக்கும்" என்றார்.

பொதுவாக, அனிருத்தின் இசை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி சில நிமிடங்களில் ஹிட்டாகி; சில நாட்கள் மட்டுமே நிலைத்திருக்கும். அதற்கு பிறகு காணாமல் போய்விடும் என்ற விமர்சனம் பலரிடம் உண்டு. ஆண்ட்ரியா இந்தப் பேட்டியில் அதனைத்தான் மறைமுகமாக சொல்லி அனிக்கு ஒரு குட்டு வைத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன.

LATEST News

Trending News