ஆத்தாடி.. எத்த தண்டி.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நிவேதா தாமஸ்..! ரசிகர்கள் ஷாக்..!
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் நடித்துவந்த இவர் போராளி திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார்.
அதனை தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலுக்கு மகள், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கை என கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் மலையாளம், தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக மாறினார்.
இந்நிலையில்தான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்
அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது இல்லை. இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்த நிவேதா தாமஸ் இடையில் திடீரென காணாமல் போனார்.