'தளபதி 66' பட அறிவிப்புக்கு பின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த முதல் வேலை!

'தளபதி 66' பட அறிவிப்புக்கு பின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த முதல் வேலை!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதையும், பிரபல இயக்குனர் வம்சி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைத்து விவரங்களையும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள ’தளபதி 66’ திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் குடும்பத்துடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News