இன்ஸ்டா வீடியோ- எதிர்ப்பு தெரிவிக்கும் திருநங்கைகள்; ஷாக் ஆன ரசிகர்கள்!
டிக்டாக் மூலம் பிரபலமானவர் சசிலயா. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தன்னிடம் மிரட்டல் தொனியில் இரண்டு திருநங்கைகள் யாசகம் கேட்பதாகவும், வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறியதற்கும் மரியாதை குறைவாக என்னை பேசுகிறார்கள் என்றும் பேசி வீடியோ ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `ஒரு சில திருநங்கைகளால் எல்லாருக்கும் கெட்ட பேரு!' என்ற கேப்ஷனோடு பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். திருநங்கை சமூகத்து மக்களை இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்டுள்ளதாகத் திருநங்கைகள் பலர் அவரது காணொளிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.