எனக்கு துரோகம் செய்துவிட்டார், நிறைய ஏமாந்துட்டேன்!! காதலி குறித்து பேசிய பப்லு பிரித்திவிராஜ்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ்.
இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். அவருக்கு வெறும் 24 வயது தான்.
தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்திவிராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்திவிராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது.
எனக்கு கடவுள் துரோகம் செய்துவிட்டார். திரைத்துறையில் வாய்ப்பு, அழகு, நல்ல உடலை கொடுத்த கடவுள், வாழ்க்கையை மற்றும் தொங்கலில் விட்டு விட்டார் என்று பப்லு பிரித்திவிராஜ் எமோஷனலாக பேசியுள்ளார்.