'மணி ஹெய்ஸ்ட்' பாடலை ஐபிஎல் பாடலாக மாற்றி பாவனா!

'மணி ஹெய்ஸ்ட்' பாடலை ஐபிஎல் பாடலாக மாற்றி பாவனா!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடர் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும், இந்த தொடரின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் வெளியானது என்பதும் இதன் அடுத்த பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர்களில் விறுவிறுப்பான காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது என்பதும் குறிப்பாக புரபொசர், டோக்கியோ, நைரோபி போன்ற கேரக்டர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த தொடரில் வரும் டைட்டில் பாடல் உள்பட ஒருசில பாடல் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’மணி ஹெய்ஸ்ட்’ பாடலை மையமாக வைத்து தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் ஐபிஎல் பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்து அவரே பாடியுள்ளார்.

இந்த பாடலில் அவர் ஐபிஎல் அணிகள், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாடியுள்ளார். இந்த பாடல் மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள் இந்த பாடலை மிகவும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகள் உள்பட பல கிரிக்கெட் போட்டிகளின் தொகுப்பாளினியாக பாவனா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES