சூர்யா படத்தில் டி.இமான் அறிமுகம் செய்யும் பாடகி!

சூர்யா படத்தில் டி.இமான் அறிமுகம் செய்யும் பாடகி!

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் பாடகி ஒருவரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்

சூர்யாவின் 2டி எண்ட்ர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சரவணன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப்படத்தில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் பவித்ரா என்பவரை பாடகியாக அறிமுகம் செய்ய உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள டி.இமான், பவித்ராவை பாடகியாக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் சூர்யாவுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்

டெல்லியை சேர்ந்த பவித்ரா ஏற்கனவே பல ஆல்பங்களில் பாடி உள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News