கமல் வீட்டில் விசேஷம்... கலந்துக் கொள்ளாத ஸ்ருதிஹாசன்

கமல் வீட்டில் விசேஷம்... கலந்துக் கொள்ளாத ஸ்ருதிஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலின் வீட்டில் நடந்த விசேஷத்தில் ஸ்ருதி ஹாசன் கலந்துக் கொள்ளவில்லை.

நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பிறகு வீட்டை கட்சி அலுவலகமாகவும் செயல்படுத்தி வந்தார். இந்த வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. தற்போது புதுப்பிக்கும் பணி முடிந்த பிறகு கமல்ஹாசன் குடும்பத்தார் அங்கு ஒன்று கூடினார்கள்.

சாரு ஹாசன், அவரின் மனைவி கோமளம், சுஹாசினி மணிரத்னம், அனு ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் வீட்டின் விசேஷத்தில் கலந்துக் கொண்டார்கள். அனைவரும் இருக்கும் குடும்ப புகைப்படங்களை நடிகை சுஹாசினி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல் குடும்பத்தினர்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஸ்ருதி ஹாசன் மிஸ்ஸிங் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LATEST News

Trending News