அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கீங்க.. ரோஜா மகளின் அட்டகாசமான லேட்டஸ்ட் போட்டோஸ்!

அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கீங்க.. ரோஜா மகளின் அட்டகாசமான லேட்டஸ்ட் போட்டோஸ்!

சென்னை: 90-களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது அரசியல் மற்றும் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகை ரோஜா: 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. சூரியன், உழைப்பாளி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி 11 ஆண்டுகள் காதலித்து பின் 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

Roja RK Selvamani Anshu Malika

காதல் திருமணம்: 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடிகை ரோஜா சினிமாவில் நடிப்பை குறைத்து கொண்ட இவர் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதன் பின் சின்னத்திரை நடுவராக கலந்து கொண்டார். அதன் பின் கடந்த 2004-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டார் ரோஜா. ஆனால் அதில் தோற்றார். அதன் பிறகு 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் அமைச்சராகவும் பதவி வகித்தார் ரோஜா.

Roja RK Selvamani Anshu Malika

ரோஜாவின் மகள்: மீண்டும் அன்பே டயானா படத்தில் நடித்த ரோஜா விஜய் டிவியில் குக்வித் கோமாளியில் நடுவராக கலந்து கொண்டார். சினிமா, அரசியல் என பிஸியாக இருக்கும் இவரின் மகள், அன்ஷு மாலிகா செல்வமணி, அமெரிக்காவில் Luddy School of Informatics, Computing and Engineering கல்லூரியில் Computer Science படித்து வந்தார். அவருக்கு அமெரிக்காவின் ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் Herman B Wells விருது வழங்கி கௌரவித்தது. இதை பூரிப்புடன் ரோஜா தனது இன்டஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். தற்போது ரோஜாவின் அன்ஷு மாலிகா செல்வமணி இன்ஸ்டாகிராமில் விதவிதமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதில், இந்த போட்டோ இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு அமெரிக்க பத்திரிகைக்காக எடுத்த போட்டோ. ஆனால், அந்த அப்போது வெளியாகவில்லை என்பதால் இப்போது வெளியிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES