இது வாடாத காகித பூ.. 'DC' வாமிகா கபி லுக்கை ரீகிரியேட் செய்த அஞ்சனா!
சென்னை: இயக்குனராக இருந்த லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் 'DC'. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் தரமாக இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகி தியேட்டரில் நல்ல வசூலை அள்ளியது.
லோகேஷ் கனராஜின் டிசி: இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி என்ற கேரக்டரிலும், சந்திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபி நடித்திருந்தார். இவர் ஒரு பாலியல் தொழிலாளியாக பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பது போல அந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, சந்திரா வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு காகிதத்தால் செய்யப்பட்ட சிகப்பு நிற ரோஜா பூவை கையில் எடுத்துக் கொண்டுதான் வருவார். இதுதான் இந்த திரைப்படத்தில் பெரிய ஒரு ஹைலைட் பாயிண்ட்டாகவும் வைத்திருப்பார் இயக்குநர்.

வாமிகா கபி: ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜ் எதற்காக இந்த பூவை கையில் வைத்திருக்க இந்த பூ 'வாடவே வாடாதா' என்று கேட்கும்போது, அதற்கும் அவர் ஒரு அழுத்தமான பதிலை சொல்வார். "இது வாடாது, இது காகித பூ... நானும் இது போலத்தான்" என்று சொல்லும் அந்த வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனால் இந்த திரைப்படத்தில் அந்த சிகப்பு நிற ரோஜா பூவுக்கு மிகப்பெரிய ஒரு பங்கும் இருந்தது. அதிலும் குறிப்பாக, சந்திரா அந்த சிகப்பு நிற ரோஜா பூவை வாயில் வைத்துக் கொண்டு, கையில் துப்பாக்கியை எடுக்கும் காட்சி அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும்.

அட்டகாசமான போஸ்: இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், பல நடிகைகளும் இதுபோல ரீகிரியேட் செய்து வீடியோக்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது தொகுப்பாளினி அஞ்சனாவும் வாமிகா கபி நடித்த சந்திரா கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில், கையில் காகிதத்தால் செய்யப்பட்ட சிகப்பு நிற ரோஜா பூவுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.