உடைகளை பற்றி பேசாதீர்கள்.. ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி

உடைகளை பற்றி பேசாதீர்கள்.. ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி

சென்னை: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. இந்நிலையில் அவரது உடை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியான நடிகையாக இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இரண்டு மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அழகு மட்டுமின்றி திறமையுள்ள நடிக்க தெரிந்த நடிகை என்ற பெயரை பெற்றவர் அவர். தமிழில் அவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டர் கிடைத்தாலும்; அதில் பெரிய அளவில் அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்தான் ஆனார்.

Aishwarya Lekshmi Hits Back at Outfit Critics Why Is a Woman s Dress Always a Debate

கட்டா குஸ்தி மாஸ்: அதேசமயம் கட்டா குஸ்தி திரைப்படமோ ஐஸ்வர்யாவுக்கு வேறு லெவலில் பெயர் பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அட்டகாசமான சண்டை காட்சிகளில் எல்லாம் நடித்து அசரடித்திருந்தார். தமிழுக்கு மீண்டும் ஒரு விஜயசாந்தி கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு கதை ஒரு காரணம் என்றால்; இன்னொரு காரணம் ஐஸ்வர்யாவின் நடிப்பும், அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டதும்தான்.

கட்டா குஸ்தி 2: கடைசியாக அவர் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் பாகமே போன்றே இதிலும் தன்னுடைய கீர்த்தி கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இப்படத்தில் அவரது கேரக்டருக்கு மேற்கொண்டு வெயிட்டேஜை ஏற்றியிருந்தார் இயக்குநர். ஐஸ்வர்யாவும், தன்னுடைய சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி இதிலும் மாஸ் காண்பித்துவிட்டார்.

சர்ச்சை: இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஐஸ்வர்யாவின் நடிப்பை எல்லோருமே பாராட்டினார்கள். சூழல் இப்படி இருக்க அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் அணிந்திருந்த உடையை வைத்து பலரும் அவரை விமர்சனம் செய்தார்கள். அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் கொடுத்த பேட்டியில், "பெண்களை பற்றி தவறான கருத்துக்களை சொல்பவர்களை யாரும் கேள்வி கேட்பதே இல்லை.

பெண் பற்றி: ஆனால் ஒரு பெண் என்ன உடை அணிகிறார என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். நமது நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை பற்றியோ முதியோர் இல்லங்களில் கைவிடப்படும் பெற்றோர்களை பற்றியோ ஏன் பேசுவதில்லை. ஒரு பெண்ணின் உடை மட்டுமே விவாத பொருளாக மாறுகிறதே அது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

LATEST News

Trending News

HOT GALLERIES