பிரபல 40 வயது நடிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் வாங்கி கொடுத்தாரா விஜய்.. மீண்டும் எழுந்த விவாகரத்து சர்ச்சை..!
நடிகர் விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை கிசுகிசுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, அவருடைய குடும்பத்தில் சில சலசலப்பு ஏற்பட்டதாகவும், விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் வருவதற்கு பிரபல நடிகை ஒருவர் தான் காரணம் என சர்ச்சை எழுந்தது.
மேலும் அந்த நடிகையால் இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர் என பல வதந்திகள் எழுந்தன. இதுகுறித்து பல பத்திரிகையாளர் Youtube சேனலில் பேசி வந்தனர். ஆனால், அதன்பின் அந்த சர்ச்சை அப்படியே அமைதியானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதே சர்ச்சையை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கிளப்பியுள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை திரிஷா வீட்டில் IT ரைடு நடந்தது.
இந்த IT ரைடில் திரிஷா வீட்டில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஒன்று கிடைத்துள்ளது. இதை யார் வாங்கி கொடுத்தார் என கேட்டதற்கு, நடிகர் விஜய் தான் வாங்கி கொடுத்தார் என திரிஷா கூறினாராம்'.
இப்படியொரு விஷயத்தை கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் அந்த மூத்த பத்திரிகையாளர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.