ரத்தம் சொட்ட சொட்ட படுகாயம் அடைந்த புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!
விஜய் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2000ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தளபதி விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் பாலிவுட்டில் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் ஒருவரை திஎருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, சமீபத்தில் தனது புருவத்தில் காயமடைந்த ரத்தம் சொட்ட சொட்ட இருந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில், ‘பிரியங்காவுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இது ஏதாவது திரைப்படத்திற்கான போட்டோஷுட் புகைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்துள்ள பிரியங்கா சோப்ரா, ‘எனக்கு காயம் பட்டது உண்மைதான் என்றும் ஆனால் புருவத்தில் காயமில்லை என்றும், கன்னத்தில் தான் காயம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரியங்கா சோப்ரா ’சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் என்பதும் இந்த வெப்தொடர் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்டது என்பதால் இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.