செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நடிகை.. முத்தம் கொடுத்துவிட்டு ஓடிய ரசிகர்..
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார் . கடைசியாக அவரது நடிப்பில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படம் வெளியானது. ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அக்ஷய் குமார் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் உருவானது. அதில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு பேசப்பட்டாரோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியும் அக்ஷய் குமார் பேசப்படுவதுண்டு. உடலுக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா விளம்பரத்தில் அவர் நடித்ததன் மூலம் மிகப்பெரிய எதிர்வினையை சமீபத்தில் அக்ஷய் சந்தித்தார். இதனையடுத்து அதுகுறித்து மன்னிப்பு கேட்ட அக்ஷய், “ரசிகர்களின் எதிர்ப்பு அலை எனக்கு நன்றாக புரிகிறது. இனிமேல் புகையிலை பொருள்களின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன்” என தெரிவித்திருந்தார்.
அக்ஷய் குமாருக்கு கடைசியாக எந்தப் படம் வெற்றி பெற்றதென்று அவரிடமே சென்று கேட்டாலும் அவருக்கே தெரியாத நிலைதான் இருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஓஎம்ஜி 2, மிஷன் ராணிகஞ்ச், படே மியான் சோட்டே மியான் ஆகிய மூன்று படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றார் அக்ஷய் குமார்.
நிலைமை இப்படி இருக்க எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளி, கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் பாலிவுட்டிலும் இயக்கினார். சர்ஃபிரா என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலும் செய்திருந்தார். ஆனால் அக்ஷய் குமார் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக படத்தின் ரிசல்ட் அமைந்து தோல்வியையே சந்தித்திருக்கிறது.
இந்நிலையில் அக்ஷய் குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், “ஒருமுறை எனது அருகில் அந்த சம்பவம் நடந்தது. அதாவது இரண்டு பேர் ஒரு நடிகையிடம் வந்து செல்ஃபி கேட்டார்கள். அந்த நடிகையும் சரி என்று சொல்லி போஸ்ட் கொடுத்தார். அப்போது இரண்டு பேரில் ஒருவர் ரெடி 1,2,3 என்று கூற; இன்னொருவர் நடிகைக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஒரு பக்கம் ஓடிவிட்டார். இன்னொருவர் இன்னொரு பக்கம் ஓடிவிட்டார். இருவரும் வெவ்வேறு பக்கத்தில் ஓடியதால் யாரை பிடிப்பது என்று தெரியாமல் குழம்பிவிட்டார் அந்த நடிகை.அந்த நடிகையின் பெயரை நான் சொல்லமாட்டேன்” என்றார்.