போடுடா வெடிய.. பாலிவுட்டில் நுழையும் திரிஷா..! ஹீரோ யாருன்னு பாருங்க..!

போடுடா வெடிய.. பாலிவுட்டில் நுழையும் திரிஷா..! ஹீரோ யாருன்னு பாருங்க..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் இடத்தை தற்போது பிடித்திருக்கும் நடிகை திரிஷா தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடி தற்போது பாலிவுட் வரை வாய்ப்புகளை பெற்று விட்டார்.

இரண்டாவது இன்னிங்ஸில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட திரிஷா தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களோடு நடித்தவர்.

இதனை அடுத்து மீண்டும் தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் நடிகை திரிஷா அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து வெளி வந்த லியோ படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பலரையும் அசத்தியிருக்கிறார்.

அதிலும் யாரும் எதிர்பார்க்காத லிப்லாக் காட்சியில் தளபதியும், திரிஷாவும் அசத்தியிருந்தார்கள். இது பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்த வந்த போதும் அந்த இடத்தில் அந்த காட்சிக்கு தேவை என்ற பட்சத்தில் தான் அப்படி நடித்ததாக அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கமலஹாசன் நடிக்க இருக்கும் “தக் லைஃப்” படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த நடிக்க இருக்கும் தலைவர் 171 வது படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்போது திரிஷா அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் இவர் நடிக்க இருக்கக்கூடிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திரிஷாவுக்கு கடும் போட்டியாக இருந்த நயன்தாரா அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானோடு இணைந்து நடித்த ஜவான் படம் வெற்றி அடைந்தது. எனினும் தமிழில் இவரது படங்கள் அந்த அளவு மார்க்கெட்டில் தற்போது சூடு பிடிக்கவில்லை.

இதனை அடுத்து தற்போது முன்னணியில் இருக்கும் திரிஷா, பாலிவுட் நடிகரான சல்மான் கானுடன் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளி வந்துள்ளது.

எனவே இந்தப் படத்தில் இவர் நடிக்க இருக்கக்கூடிய விஷயமானது, உறுதியான உடன் விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளி வரும் என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்க சல்மான்கான் நடிப்பில் கரன் ஜோக்கர் தயாரிக்க உள்ள நிலையில் பாலிவுட் ஏற்கனவே திரிஷா நடித்திருந்தாலும் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இனிவரும் காலங்களில் பாலிவுட்டில் திரிஷா சாதனை படைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES